நக்மாவை டிஸ்மிஸ் செய்த காங்கிரஸ் !

- in டாப் நியூஸ்
53
Comments Off on நக்மாவை டிஸ்மிஸ் செய்த காங்கிரஸ் !
ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை நக்மா, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து வந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். அவருக்கு பதிலாக தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை இழந்தாலும் நடிகை நக்மா, ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக தொடர்ந்து செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த விளக்கம் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்