தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

- in Featured, சினிமா
66
Comments Off on தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தொடங்கும்போதே அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை ஏற்கெனவே நடந்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். தொடங்கிய முதல் நாளே இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படம் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பஹத் பாசில், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்