தெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம்

- in டாப் நியூஸ்
68
Comments Off on தெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம்
தெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மிர்யால்குடா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 12 வயதில்  இரட்டை குழந்தைகள் இருந்தன. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுமே மனநலம் பாதித்த குழந்தைகள். இதனால் அவர்களை வளர்க்க பெற்றோர் சிரமப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இனி குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என நினைத்த பெற்றோர் குழந்தையை கொள்ள முடிவு செய்தனர்.
இதனையடுத்து குழந்தையின் தாய்மாமன் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தைகளின் தாய்மாமனையும், பெற்றோர்களையும் கைது செய்தனர். பெற்ற குழந்தைகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்