தெர்மோகோலுக்கு பதில் சோலார் தகடுகள்: தமிழக அரசின் புதிய திட்டம்

- in டாப் நியூஸ்
46
Comments Off on தெர்மோகோலுக்கு பதில் சோலார் தகடுகள்: தமிழக அரசின் புதிய திட்டம்
சமீபத்தில் அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க அமைச்சர் ஒருவர் அணையின் நீர் மட்டத்தில் தெர்மோகோல் மிதக்கவிட்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இந்த திட்டம் தோல்வி அடைந்து சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது
இந்த நிலையில் அணைகளில் உள்ள நீரின் மேல் தெர்மோகோலுக்கு பதிலாக தற்போது சோலார் தகடுகள் மிதக்க வைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கவுள்ளது. இதன் மூலம் நீர் ஆவியாகாமல் தடுப்பது மட்டுமின்றி சூரிய சக்தியின் மூலம் மின்சாரமும் பெறலாம்.
ஏற்கனவே இந்த திட்டம் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த திட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்படவுளது. குஜராத்தில் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டொன்றிற்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. அதேபோல் கேரளாவிலும் இந்த திட்டத்தால் வருடத்திற்கு ஏழரை லட்சம் யூனிட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் மற்றும் இந்திய சூரிய சக்தி கழகம் இணைந்து, ஆயிரத்து 25 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்