தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு

- in டாப் நியூஸ்
57
Comments Off on தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு

தூத்துக்குடி: மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் எஸ்.பி மகேந்திரன் ஆகியோர் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டு நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இச்சம்பவத்தில் 11 பேர் வரை போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் எஸ்.பிமகேந்திரனை இட மாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக இட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்து வரும் சந்தீப்நந்தூரி நியமனமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன் சென்னை (வடக்கு)போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த முரளிரம்பா தூத்துக்குடிமாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் நெல்லை மாட்ட கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகன போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள், தலைமை செயலர்கள் .

உள்துறை செயலர்கள் ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கவர்னருடன், முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ள நிலையில் இந்த இடமாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது..

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்