தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு!

- in டாப் நியூஸ்
85
Comments Off on தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். 

அவர்களை போலீசார் தடுக்க முயன்று, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர்.
இன்று மீண்டும் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 22 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.  பெண்கள், மாணவர்கள் என்றும் பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோசமான செயலால் தமிழகமே கொதித்துப் போய் உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மர்றும் கன்னியாகுமாரி மாவட்டகளின் இணைய சேவையை முடக்கும்படி உளவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த மூன்று மாவட்டங்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பாக இணையதளங்களில் வசந்திகளை பரப்பப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது எனவும், இணைய சேவையை முடக்குவது மூலம் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள முடியாது எனவே வன்முறையை கட்டுப்படுத்த முடியும் எனவும், போராட்டம் குறித்த தவறான செய்திகள் பரவாமல் தடுக்கப்படும் என்றும் உளவுத்துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள இணையதள சேவைகள் போரட்டம் முடிவுக்கு வந்த பின்னர் அல்லது கட்டுக்குள் வந்த பின்னர் மீண்டு வழங்கபப்டும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்