துருக்கியில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், பலர் படுகாயம்

- in டாப் நியூஸ்
82
Comments Off on துருக்கியில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், பலர் படுகாயம்
அன்காரா,
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. துருக்கியின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், வானுயுர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால், பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால், காயம் அடைந்த 35 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் பீதி அடைந்த மக்கள் அவசர அவசரமாக கட்டிடங்களை விட்டு வெளியேறிய போது காயம் ஏற்பட்டதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்துக்கு பிறகு, 8 முறை லேசான முறையில் பின் அதிர்வுகள் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையடுத்து, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்