துப்பாக்கி பட வில்லனோடு ஸ்ருதி ஹாசன் காதலா?

- in Featured, டோன்ட் மிஸ்
149
Comments Off on துப்பாக்கி பட வில்லனோடு ஸ்ருதி ஹாசன் காதலா?

துப்பாக்கி, அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வித்யுத்தும், நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா திரையுலகங்களில் பிசியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி ஏதாவது ஒரு நடிகருடன் இணைத்து பேசப்படுவது வழக்கம். சமீபத்தில் ரன்பீர் கபூரும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுத்தனர். தற்போது பாலிவுட் நடிகரும், துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்த வித்யுத் ஜாம்வாலுடன் ஸ்ருதிஹாசனும் ஒன்றாக வலம் வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் காதல் காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வருவதாகவும், காபி ஷாப், உணவு விடுதி என எங்குசென்றாலும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் நல்ல நண்பர்கள் என இருவரும் கூறி வந்தாலும், இருவரின் நெருக்கத்தை பார்க்கும் போது காதல் ஜோடியைப்போல் வலம் வருவதாக கிசுகிசுப்படுகிறது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.