திரை உலகில் அதிர்ச்சி: மேலும் ஒரு நடிகை மர்மமான முறையில் மரணம்!!

- in Featured, சினிமா
98
Comments Off on திரை உலகில் அதிர்ச்சி: மேலும் ஒரு நடிகை மர்மமான முறையில் மரணம்!!
பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் மலையாள நடிகை ரேகா மோகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்யனபலக்கன், யாத்ரமொழி ஆகிய மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரேகா மோகன். சில மலையாள சின்னத்திரை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளனர்.
இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். திருச்சூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரேகா மோகனை, அவரது கணவரால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அப்பகுதி காவல்துறையை தொடர்பு கொண்ட அவர், ரேகா மோகனை தொடர்பு கொள்ள முடியாதது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரேகா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, அவரது வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, ரேகா மோகன் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
இதனை தொடர்ந்து ரேகா மோகனின் மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி