திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது

- in டாப் நியூஸ்
84
Comments Off on திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரம் வெட்ட முயன்றதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள உணவகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தமிழர்கள் உணவு அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த திருப்பதி செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், செம்மரம் வெட்ட வந்தாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.

செம்மரம் வெட்ட அவர்கள் முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட தமிழர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற ஆந்திர போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்