திருமண ரகசியம் காக்கும் தனுஷ் ஹீரோயின்

- in சினிமா
138
Comments Off on திருமண ரகசியம் காக்கும் தனுஷ் ஹீரோயின்

நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த முதல்படம் ராஞ்சனா. அவருக்கு ஜோடியாக சோனம்கபூர் நடித்தார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்த சோனம் கபூர் தொழில் அதிபரும், பாய்பிரண்டுமான ஆனந்த் அஹுஜாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் கடந்த சில வருடங்களாகவே டேட்டிங் செய்து வருகின்றனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இம்மாதம் 29, 30 தேதிகளில் இவர்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது.

தற்போது அதில் மாற்றம் செய்யப் பட்டு திருமணத்தை இந்தியாவிலேயே நடத்துவது என்றும் வரும் மே 7 மற்றும் 8ம் தேதிகளில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து சோனம் கபூர் தரப்பில் இதுவரை உறுதி செய்யாமல் திருமண தேதியை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் திரையுலக முக்கியஸ்தர்களிடம் தனிப்பட்ட முறையில் சோனம் கபூர் குடும்பத்தினர் பேசி, மே 7 மற்றும் 8ம் தேதியை தங்களுக்காக ஒதுக்கி வைக்கும்படி கேட்டிருக்கின்றனர். சமீபத்தில்தான் சோனம் கபூரின் உறவினரான ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். இந்நிலையில் திருமண விழாவை தடபுடலாக நடத்துவதை பகிரங்கப்படுத்த குடும்பத்தினர் விரும்பாததாலேயே திருமண தேதியை ரகசியமாக வைத் திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

Tags:

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி