திருடுபோன ஐரோப்பா லீக் கால்பந்து கோப்பை மீட்பு

- in Sports
118
Comments Off on திருடுபோன ஐரோப்பா லீக் கால்பந்து கோப்பை மீட்பு

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் ஐரோப்பா லீக் கால்பந்து போட்டிக்கான சாம்பியன் கோப்பை திருடப்பட்டு, சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக குவானஜுவாடோ நகர அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது மைதானத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்தக் கோப்பை, பின்னர் கார் ஒன்றில் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.

அப்போது காரிலிருந்து அந்தக் கோப்பை திருடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில், அந்தக் கோப்பை மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர். குவானஜுவாடோ நகர அரசு வழக்குரைஞர், மீட்கப்பட்ட கோப்பையுடனான புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனினும், அந்தக் கோப்பை எவ்வாறு, யாரால் திருடப்பட்டது, பின்னர் எவ்வாறு மீட்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் அரையிறுதிகளில் மார்செய்லே-ரெட் புல் சால்ஸ்பர்க் அணிகளும், அர்செனல்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகளும் மோதுகின்றன. இந்த அணிகள் மோதும் அரையிறுதியின் முதல் பகுதி வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Facebook Comments

You may also like

துனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டம்