திணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை !

- in தொழில்நுட்பம்
174
Comments Off on திணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை !
download

அதிவேகத்துடனும் மேலும் அலறவைக்கும் வகையிலும் இலவச வை-பை சேவையா ? இலவசம் என்பதையும் தாண்டி அதிவேகத்துடன் எப்படி சாத்தியாமாகும்? ஆகும் . ஆனால் இது இந்தியாவில்ல . நியுயார்க்கில் ..!நியுயார்க்கில் பொது மக்களுக்கான இலவச வை-பையை வழங்கும் திட்டத்தில் LinkNYC public Wi-Fi kiosks சுருக்கமாக Links என்று அழைக்கப்படுகின்ற இந்த இலவச வை-பை சேவையை வழங்கி வரும் நிறுவனம் இன்று பயனர்களை திணறடிக்கும் விதமாக 300Mbps வரையிலான வேகத்தை பயனர்களுக்கு வழங்கி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இது வழக்கமாக நியுயார்க்கில் கிடைக்கும் இணைய வேகத்தை விட 30 மடங்கு அதிவேகமானது. இந்த சேவை சோதனை நிமித்தம் காரணமாக குறிப்பிட்ட சில தெருக்களில் மட்டுமே உலவ விட்டுள்ளது.

மேலும் இந்த சாலையில் இலவசமாக மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படியாக ஒரு டேப்லேட்டும் தரப்பட்டுள்ளது. இதன் வழியே வழிப்போக்கர்கள் கூகுளின் மேப் மற்றும் இணையத்தில் மற்ற தகவல்களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தெருக்களில் தாகத்திற்கு தண்ணீர் வைத்துதான் பார்த்திருப்போம். இங்கே இலவசமாக அனைவரும் அணுகும்படியாக லேப்டாப்பையும் அதில் இலவச இணையத்தையும் வைத்திருப்பது புது அணுகுமுறையே! மேலும் அடுத்த கட்டமாக இந்த வருடம் ஜூலைக்குள் 500 விளம்பரதார ஆதரவு இணைப்புகளுடன் நியுயார்க்கின் ஐந்து பெருநகரங்களில் 7,500 இடங்களில் இலவச வை-பை சேவை கிடைக்க வைப்பதை இலக்காக கொண்டுள்ளனர்.

Facebook Comments