தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? – பாரதிராஜா பளீச்

- in ஸ்மைல் ப்ளீஸ்
112
Comments Off on தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? – பாரதிராஜா பளீச்

சென்னை: தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார் என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்றுள்ளார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தார். நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம் என பாரதிராஜா சாடினார். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்றும் பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.

முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம் என்றும் பாரதி ராஜா கூறினார். கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் என இளைஞர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.