தவறான ஆவணங்கள் மூலம் பதவி உயர்வு: அரசு அதிகாரி கைது

- in டாப் நியூஸ்
118
Comments Off on தவறான ஆவணங்கள் மூலம் பதவி உயர்வு: அரசு அதிகாரி கைது

சென்னை,

சென்னை குறளகத்தில் செயல்படும் கதர் கிராம தொழில் வாரிய அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் கோடீஸ்வரராவ் (வயது 52). இவர், சென்னை ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு கிராமத்தில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

இவர் மீது கதர் கிராம தொழில் வாரியத்தின் உதவி மேனேஜர் சுதர்சன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

கோடீஸ்வரராவ் தவறான ஆவணங்கள் மூலம் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2007–ம் ஆண்டு சூப்பிரண்டு பதவி உயர்வுக்காக நடந்த இலாகாப்பூர்வ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தவறான ஆவணங்களை தனது சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விசாரணை நடத்தி கோடீஸ்வரராவ் பதவிஉயர்வு தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளது.

இவர் தற்போது உதவி மேனேஜராக பதவி உயர்வுபெற முயற்சி மேற்கொண்டுள்ளார். இவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் கணேசமூர்த்தி, துணை கமி‌ஷனர் மல்லிகா, உதவி கமி‌ஷனர் ஜெயசிங் ஆகியோர் மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர் சந்தியா இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணைக்கு பின்பு அதிகாரி கோடீஸ்வரராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். கோடீஸ்வரராவ் மீது மோசடி உள்ளிட்ட 5 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்