தல அஜித் யாரையாவது அழவைத்து பார்த்திருக்கீங்களா? நேரில் நடந்த சம்பவம்

- in சினிமா, டோன்ட் மிஸ்
129
Comments Off on தல அஜித் யாரையாவது அழவைத்து பார்த்திருக்கீங்களா? நேரில் நடந்த சம்பவம்

எந்த துறையில் இருந்தாலும், கடுமையாக உழைத்தால் வெற்றி தான். அது போல சினிமாவிலும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருப்பது இப்போது அனைவரும் சொல்வது நடிகர் அஜித்தை தான்.

ஆனால் இவரோ தனக்கு தானாக எந்த விளம்பரத்தையும் தேடுவதில்லை. மாறாக இவர் மீது தீவிரமாக இருக்கும் ரசிகர்கள் இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் விழா கொண்டாடுகிறார்கள்.

அப்படி இருக்க அஜித்திற்கு யாரையும் அழவைத்து பழக்கமில்லையாம். ஆனால் வேதாளம் படப்பிடிப்பின் போது அவர் சொன்னதை கேட்டு ஒரு நாள் முழுக்க அழுது கவலைப்பட்டவர் நகைச்சுவை நடிகர் மொட்டை ராஜேந்திரன்.

வேதாளம் படத்தில் தன்னோடு ஒரு காட்சியில் நடித்த அந்த காமெடி நடிகரிடம் உங்களுக்கு நடிக்க தெரியல, நடிப்பு வரல, நாளைக்கு ஒழுங்கா நடிங்க, இப்போ கிளம்புங்க என்று சொல்லிவிட்டு காரில் சென்று விட்டாராம் அஜித்.

அங்கேயே வெகு நேரமாக அழுத ராஜேந்திரன் மறுநாள் மீண்டும் படப்பிடிப்புக்கு கவலையுடன் என்ன சொல்வார்களோ என்று பதறிக்கொண்டே வந்தார்.

வழக்கம் போல ஷூட்டிங்க்கு வந்த அஜித் அன்று தனது குடுபத்தினரையும் அழைத்து வந்தார். பரபரப்பாக ஷூட்டிங் ஆரம்பமானது. டேக் எடுத்து முடிக்கப்பட்டது.

இதை அஜித்தின் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். நேற்று கவலை பட்ட காமெடி நடிகருக்கு இன்று பலத்த பாராட்டு. எல்லோரும் சிரிக்க என்னவென்று தெரியாமல் முழித்தாராம் ராஜேந்திரன்.

அஜித் அவரை கட்டிபிடித்து நேற்று நல்ல நடிச்சீங்க, உங்களை என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் நடிப்பதை அவர்களுக்கு நேரில் காட்டுவதற்காகவே மீண்டும் அதே காட்சியை டேக் எடுக்க சொன்னேன் என்று சொன்னாராம்.

பிறகு மனநிறைவான ராஜேந்திரன் வயிறு குலுங்க சிரித்தாராம். இதை பார்த்து அஜித்தின் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இது போல அவருடன் படங்களில் பணியாற்றிய பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி