தலையை துண்டிப்போம்: பினராயிக்கு நக்சல்கள் மிரட்டல்

- in டாப் நியூஸ்
110
Comments Off on தலையை துண்டிப்போம்: பினராயிக்கு நக்சல்கள் மிரட்டல்

பாலக்காடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை துண்டிப்போம் என நக்சல்கள் மிரட்டல் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பழையனூர் போலீஸ் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஆதிவாசிகளுக்கு ரேசன் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் அவர்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் பினராயி விஜயன் தலையை துண்டிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். வடக்கன்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.

இந்த போஸ்டர் விவகாரம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது கேரளாவில் 53 வயது கம்யூனிஸ் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீஜித் என்ற 26 வயது ஆதிவாசி இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்த போது அடித்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்து. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் மனநலம் பாதித்த மது என்ற பழங்குடியின இளைஞன் அரிசி திருடியதாக பிடிப்பட்டு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.

இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இதற்கு காரணமான முதல்வர் பினராயி விஜயனை பழிவாங்கவே நக்சல்கள் இப்படி ஒரு மிரட்டல் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்