தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்

- in டாப் நியூஸ்
93
Comments Off on தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
டெல்லியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் அடைந்த நோயாளி ஒருவருக்கு தலையில் ஆபரேசன் செய்வதற்கு பதிலாக காலில் ஆபரேசன் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சுஷ்ருட்டா ட்டிராமா செண்டர்’ என்ற மருத்துவமனையில் சமீபத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு விபத்து ஒன்றினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் நோயாளியின் அறைக்குள் நுழைந்து நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, வலது காலில் துளைபோட்டு ஒரு உலோக இணைப்பை பொருத்தி ஆபரேஷன் செய்தார். பின்னர் தான் காலில் ஆபரேசன் செய்ய வந்த அந்த டாக்டர் தவறுதலாக தலையில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிக்கு ஆபரேசனை செய்துவிட்டார் என்பது தெரிந்தது.

இதன்பின்னர் உடனடியாக இரு நோயாளிகளுக்கும் சரியான ஆபரேசன் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இரண்டு நோயாளிகளின் உறவினர்களும் மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை தலைவர் உறுதியளித்தார். மேலும் தவறாக ஆபரேசன் செய்த மருத்துவர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்