தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு – கபில் சிபல்

- in டாப் நியூஸ்
65
Comments Off on தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு – கபில் சிபல்
புதுடெல்லி
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து 64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் நம்பகத்தன்மை இல்லை என, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞருமான கபில் சிபல், தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
 “தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவதற்கான தீர்மானத்தை துணை குடியரசுத்தலைவர் நிராகரித்தது சட்டவிரோதம். தீர்மானம் முறையாக இருக்கிறதா? இல்லையா என்பதை மட்டுமே ஆராய வேண்டும். தீர்மானத்தை அவசர கதியில் வெங்கையா  நாயுடு நிராகரித்துள்ளார். எனவே இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என தெரிவித்தார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்