தமிழகத்தில் 2000 மெகாவாட் மின்பற்றாக்குறை

- in டாப் நியூஸ்
86
Comments Off on தமிழகத்தில் 2000 மெகாவாட் மின்பற்றாக்குறை

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில செயற்குழுவில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கோடைவெயில் அதிகரித்துள்ள நிலையில் மின்துறை அமைச்சர் தேவையான மின்சாரம் இருக்கிறது என்றும், தடையின்றி வழங்க முடியும் என்றும் சொல்கிறார். அது உண்மையல்ல. தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி தமிழகத்தில் இல்லை. அதனால் அனல், அணு மின்நிலையங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெறுவதோடு, வெளியில் குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.

தமிழகத்தில் உற்பத்தி திறன் 25,800 மெகாவாட் என்று அரசு சொல்கிறது. தற்போதைய உச்சக்கட்ட மின்தேவை 15,600 மெகாவாட்டை எட்டி இருக்கிறது. காற்றாலை, நீர்மின் நிலையங்களில் பருவகாலத்தில் தான் உற்பத்தி இருக்கும் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தற்போதைய மின்தேவையில் 2000 மெகாவாட் மின்பற்றாக்குறை இருக்கிறது. இதை சமாளிக்கத்தான் முன்னறிவிப்பில்லாத மின்வெட்டு ஆங்காங்கே ஏற்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி மே 22-ந்தேதி 4 அனல்மின் நிலையத்திலும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என்றும், பிரச்சினை தீராவிட்டால் ஜூன் 27-ந்தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மின்வினியோக பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.380 ஊதியத்தை அளிக்க வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும், ஜூன் மாதத்தில் குடும்பத்தோடு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மின்வாரிய பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்தக்கோரி மண்டலரீதியாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மின்சார பொதுத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்