தமிழகஅரசை அடிமை அரசாங்கம் என விமர்ச்சித்த தினகரன் !

- in டாப் நியூஸ்
35
Comments Off on தமிழகஅரசை அடிமை அரசாங்கம் என விமர்ச்சித்த தினகரன் !
அடிமை அரசாங்கம் என்று சொன்னால் கோபம் வருகின்றது. ஆனால், என்னை சாராய ஆலை அதிபர் என்று சொல்கின்றார்கள் என கரூர் அருகே டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியை அடுத்த பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று டிடிவி தினகரன் வந்தார்.
அப்போது  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவர் வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. அவருக்கு அதுவும் ஐ.சி.யூ வில் உள்ள ஒருவரை கைது செய்த காவல்துறை, ஒரு பெண் நிருபரை தரக்குறைவாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர், மீது வழக்கு பதிவு செய்தும், உச்ச நீதிமன்றமே தடை விதிக்காமல், இருந்த நிலையில் இதுவரை எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை இல்லை, அதை சொன்னால் இங்குள்ள அமைச்சர்களுக்கு கோபம் வருகின்றது. இந்த அரசு அடிமை அரசாங்கம் என்றால் கோபம் வருகின்றது.
ஆனால், என்னை சராய வியாபரி என்கின்றார்கள். ஒரு சாராய ஆலையிலிருந்து சாராயத்தை வாங்கி விற்கும் டாஸ்மாக் துறை அமைச்சர், டாஸ்மாக் அமைச்சர் மற்றும் சாராய அமைச்சர் என்றால் கோபம் வருகிறது. அமைச்சர் என்னை ஒருமையில் பேசுகிறார்.  அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசாங்கம் ஆக உள்ளது. ஆகவே பதவி எதுவும் நிரந்தரம் அல்ல என அவர் தெரிவித்தார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்