தனுஷ், சிம்பு, விஷால் பட நடிகை சபர்ணா தற்கொலையில் சிக்கிய கடிதம்!

- in சினிமா
272
Comments Off on தனுஷ், சிம்பு, விஷால் பட நடிகை சபர்ணா தற்கொலையில் சிக்கிய கடிதம்!

பிரபல தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும், படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை சபர்ணா.

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் சீரியல்களில் நடித்து வந்தார். மாய மோகினி , தெலுங்கில் சுகுணா என்று சொன்னால் பலருக்கு தெரியும். ஹரிச்சந்தனம் என மலையாள சீரியலிலும் நடித்துள்ளார்.

தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்த இவர் தனுஷின் படிக்காதவன், சிம்புவின் காளை, விஷாலின் பூஜை என சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். குடியரசு என்ற படத்தில் விக்னேஷ்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

தற்போது இவர் மதுரவாயல் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டினுள் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மூன்று நாட்களாக வீடு பூட்டியே கிடந்தது தெரியாமல், துர்நாற்றம் வர பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்த பின் தான் சபர்ணா இறந்தது தெரிய வந்தது.

மேலும் அங்கிருந்து ஒரு கடிதம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மரணத்தின் பின் புலன் என்ன என்று விசாரித்து வருகிறார்கள்.

எப்போதுமே எதாவது ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் இவர் இப்படி செய்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி