டோக்லாம் விவகாரம் பிரதமர் எழுப்பினாரா ? சீன பயணம் குறித்து ராகுல் கேள்வி

- in டாப் நியூஸ்
69
Comments Off on டோக்லாம் விவகாரம் பிரதமர் எழுப்பினாரா ? சீன பயணம் குறித்து ராகுல் கேள்வி

புதுடில்லி: டோக்லாம் பகுதியில் சீன படைகள் இருக்கும் நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அந்நாட்டு அதிபருடன் விவாதித்தாரா என பிரதமரின் சீன பயணம் குறித்து காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏமாற்றம்

டில்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டம் நடந்தது. இதில் மூத்த தலைவர் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
மத்திய அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி சிறு வணிகர்களை கடுமையாக பாதித்தது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஆனால்,கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மறுத்துவிட்டார். விவசாய கடன் தள்ளுபடி அரசின் கொள்கையில் கிடையாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறார். மோடி மீது நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பெயர் பாதிப்பு

அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. நிரவ் மோடி விவகாரம் குறித்து மோடி எதுவும் கூறவில்லை. மக்களின் பணம் நிரவ் மோடியிடம் பைகளில் உள்ளது. பா.ஜ., ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளனர். பலாத்கார சம்பவங்களால், இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்களில் மோடி அமைதியாக உள்ளார். டோக்லாமில் சீன படைகள் உள்ளன. ஆனால், பிரதமர் சீனாவில் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த விவகாரத்தை எழுப்ப கூட பிரதமர் நினைக்கவில்லை. இந்திய வரலாற்றில், இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறையாகும்.

பொய் பிரசாரம்

ஏழைகள் பெண்கள், சிறுபான்மையினருக்காக காங்கிரஸ் உழைக்கிறது. 2014 ல் இந்தியா முழுவதும் பா.ஜ., பொய் பிரசாரம் செய்தன. காங் எதிராக மோடி பொய் பரப்பினார். தற்போது உண்மை வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்