டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

- in டாப் நியூஸ்
434
Comments Off on டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பிசியான பகுதிகளில் ஒன்றான கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று 30 வயது பெண் ஒருவர் பிசியோதரபி செய்வதற்காக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பின்னர் அந்த பெண் குறித்த முதல்கட்ட விசாரணையில் அவர் ராணுவ தளபதி ஒருவரின் மனைவி என்பது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Facebook Comments

You may also like

நல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் காரில் இருந்து குப்பையை