டூர் சென்ற அக்கா-தம்பி லாரி மோதி பலி

- in டாப் நியூஸ்
49
Comments Off on டூர் சென்ற அக்கா-தம்பி லாரி மோதி பலி
கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் டூர் சென்ற அக்கா-தம்பி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப்(21). பிரதாப், பிரதாப்பின் சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23) ஆகியோர் கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் டூர் செய்ய திட்டமிட்டனர்.அதன்படி ஒரு வாகனத்தில் பிரதாப்பும், கவுசல்யாவும், இன்னொரு வாகனத்தில் மெர்வினும், கயல்விழியும் மதுராந்தங்கத்தில் இருந்து புறப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்ற போது,  பிரதாப் ஓட்டிச் சென்ற வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பிரதாப்பும், கவுசல்யாவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்