டிவிட்டரில் கமல் திடீரென அமைதி காக்க இதுவா காரணம்?

- in சினிமா
281
Comments Off on டிவிட்டரில் கமல் திடீரென அமைதி காக்க இதுவா காரணம்?

சென்னை : நீட் விவகாரம், டெங்கு மரணம், வடசென்னை கழிமுக பிரச்னை என்று டுவிட்டரில் அனல் கிளப்பிய நடிகர் கமல்ஹாசன் அண்மைக் காலமாக மவுனம் காப்பது இதற்குத் தானாம்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாக சொன்னது முதல் நாள்தோறும் வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது இரவு 8 மணிக்கெல்லாம் ஒரு டுவீட் வந்து விழுந்துவிடும். நீட் விவகாரம், டெங்குவிற்கு சிறுவன் மரணமடைந்தது என அரசு அக்கறை காட்ட வேண்டிய விஷயங்களை சுட்டிக் காட்டி வந்தார் கமல்.

தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அரசியல் அறிவிப்பை கமல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சிக்காக நிதி திரட்டுவதற்காக செயலியை மட்டும் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பிறகு கடைசியாக நவம்பர் 30ம் தேதி ஓகி புயல் பாதிப்பிற்கு கன்னியாகுமரி மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தது தான் கடைசியாக அவர் மக்களுக்காக விடுத்த செய்தி.

 • ஆர்கே நகர் தேர்தலின் போதும் மவுனம்

  கருத்து சொல்லாத கமல்

  ஆர்கே நகர் தேர்தலில் விஷால் களமிறங்கியதற்கே கமல் தான் பின்னணியில் இருந்து இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஆர்கே நகர் தேர்தேலில் யாருக்கு ஆதரவு, பணப்பட்டுவாடா குறித்து எந்த கருத்தையும் கமல் தெரிவிக்கவில்லை. கமலின் 8 மணி இலக்கிய டுவீட்டை பார்த்து அடுத்த நாளே கருத்து கூறும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த மாதம் கமலை திட்ட காரணம் கிடைக்கவில்லை.

 • அமைதிக்கு என்ன காரணம்?

  ஏன் இந்த அமைதி?

  ஒரு மாதமாக கமல்ஹாசனின் டுவிட்டர் பக்கம் அமைதி காக்க என்ன காரணம் தெரியுமா. அவர் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறாராம். நிதிப் பிரச்னை காரணமாக 2 ஆண்டுகள் முன்பே திரைக்கு வர வேண்டிய விஸ்வரூபம் 2வின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

 • விஸ்வரூபம் 2வில் பிசி

  படப்பிடிப்பில் பிசி

  இதற்காக அமெரிக்காவில் பிசியாக இருக்கிறாராம் கமல், இதன் பிறகு இந்தியன் 2ம் பாகம், தலைவன் இருக்கிறான், சபாஷ் நாயுடு உள்ளிட்ட 3 படங்களிலும் வரும் ஆண்டில் கமல் நடிக்க உள்ளார். படப்பிடிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் கமல் தமிழக நிலவரங்களை தொடர்ந்து பார்த்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

 • ரஜினி அறிவிப்புக்குப் பின்

  ரஜினிக்காக வெயிட்டிங்

  ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பிற்கு பிறகு தமிழகம் திரும்பும் கமலின் அரசியல் பயணத்தில் வேகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அரசை கடுமையாக விமர்சித்து வந்த கமலின் இந்த திடீர் மவுனத்துக்கும் ஏதோ காரணம் இருக்கும் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி