ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ஷூட்டிங் தொடக்கம் !

- in சினிமா
36
Comments Off on ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ஷூட்டிங் தொடக்கம் !
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.

ராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் ரிலீஸான படம் ‘மொழி’. அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்தப் படத்துக்குப் பிறகு, 10 வருடங்கள் கழித்து ராதாமோகன் – ஜோதிகா கூட்டணி இணைந்துள்ளது.
‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும். இதில், ஆர்.ஜே. வேடத்தில் நடிக்கிறார் ஜோதிகா.
விதார்த், லட்சுமி மஞ்சி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன்ராம், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னையில் இன்று தொடங்கியது. சிவகுமார் கிளாப் அடித்து ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்தார். சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்க இருக்கின்றனர். அக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி