ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன் – பன்னீர்செல்வம் பேச்சு

- in டாப் நியூஸ்
299
Comments Off on ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன் – பன்னீர்செல்வம் பேச்சு
உதகை,
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன் என துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஊட்டி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியதாவது:
அதிமுகவுக்கு துரோகம் செய்ததாக சசிகலா குடும்பத்தினர் 16 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. சில நேரங்களில் சதி வெல்லும், ஆனால், அது நிரந்தரமல்ல. நாங்கள் அசந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார்; இனி அந்த தவறு நடக்காது.
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன். அதிமுகவை வீழ்த்த எத்தனை சதித்திட்டம் தீட்டினாலும், அசைக்க முடியாது.
தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். எம்,ஜி,ஆர் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்தது நீலகிரி.
மன்னிப்பு கடிதம் தந்த சசிகலாவை பாவம் பார்த்து ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது டிடிவி தினகரன் தரப்பு தான்.
அதிமுகவில் 19 ஆண்டுகளாக நான் இருந்த நிலையில் எல்.கே.ஜி படிக்க பெரியகுளம் வந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது டிடிவி தினகரன் தரப்பு தான்.
எந்தக்கூட்டத்திலும் கலந்துகொள்ள கூடாது என ஜெயலலிதாவால் 2008 லேயே ஒதுக்கப்பட்டவர் டிடிவி கட்சிக்கு உயிர்கொடுத்த தியாகிகளின் வரலாறெல்லாம் டிடிவி தினகரனுக்கு தெரியாது. டிடிவி தினகரனை சந்திக்கும் முன்பே பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக இருந்தவன் நான்.
ஜெயலலிதா காட்சிய தர்மத்தின் பாதையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்