ஜப்பான் கடல் எல்லையில் வட கொரியா புதிய ஏவுகணை சோதனை

- in டாப் நியூஸ்
457
Comments Off on ஜப்பான் கடல் எல்லையில் வட கொரியா புதிய ஏவுகணை சோதனை

டோக்கியோ: வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில் புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவசரமாக நடைபெற்ற ஜப்பான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷின்ஸோ அபே, நாட்டின் கடல் எல்லைக்கு அருகில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
வடகொரியாவால் சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடியது என்று அமெரிக்கா, தென்கொரிய ஆகியன தெரிவித்துள்ளன. ஆனால் இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என்று ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும் வடகொரியாவின் இந்த தொடர் ஏவுகணை சோதனைகளுக்க அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்