சொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…!

- in சிறப்புக் கட்டுரை, வினோதங்கள்
334
Comments Off on சொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…!
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. வாழ்க்கையில் பெரும்பாலான அளவு தொகையை வாடகைக்கே செலவழித்து இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் சொந்த வீட்டை கட்டும் அளவுக்கு தொழில் முன்னேற்றத்தை அளிக்கும்  என்று கூறப்படுகிறது.
அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி எனும் இடத்தில் உள்ள முருகன் கோவில்தான். அங்குள்ள பாலசுப்பிரமணியன் வேண்டிய அனைத்தையும் வழங்க கூடியவர். குறிப்பாக சொந்த வீடு பற்றிய கனவை நினைவாக்குவார் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
சிறுவாபுரியில் உள்ள முருகன் நான்கரை அடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியற்றை தரக் கூடிய ஆற்றல் கொண்டவர் என அருணகிரி நாதர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
இந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலையை தவிர மற்ற சிலைகள் அனைத்தும் மரகத கற்களால் செய்யப்பட்டவை. இது மேலும் இந்த கோவிலுக்கு  பெருமை சேர்க்கிறது.
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.

 

Facebook Comments

You may also like

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை

துப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின்