சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு 5 வருட சிறை தண்டனை !

- in டாப் நியூஸ்
44
Comments Off on சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு 5 வருட சிறை தண்டனை !
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1991-1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மீதும், இவரின் மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், சத்யமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரின் மனைவி சந்திராவிற்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனையும் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்