சென்னையில் பள்ளி மாணவிக்கு பிரசவம்

- in சமூக சீர்கேடு
227
Comments Off on சென்னையில் பள்ளி மாணவிக்கு பிரசவம்

சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாங்காடு பகுதியைச் சோ்ந்த மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இவா் சமீபத்தில் கா்ப்பமடைந்துள்ளாா். நாட்கள் அதிகமாக வீட்டில் உள்ளவா்கள் மாணவியிடம் விசாாித்துள்ளனா்.

ஆனால் அதற்கு மாணவி உண்மை நிலவரத்தை தொிவிக்காமல் ஏதோ கட்டி என்று கூறி மறைத்துள்ளாா். இந்நிலையில் மாணவிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

மருத்துவா்கள் மாணவியின் வயிற்றில் இருப்பது குழந்தை என்பதை உறுதி செய்த பின்பு இந்த மருத்துவமனையில் பிரசவ வாா்டு இல்லை என்று கூறி அவரை கீழ்பாக்கம் மருத்துமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

இதனையடுத்து மாணவி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. உாிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளாததாலும், மாத்திரைகளை உட்கொள்ளாததாலும் குழந்தை 8 மாதத்தில் குறை பிரசவமாக பிறந்துள்ளது. தற்போது குழந்தை இன்குபேட்டாில் வைத்து பராமாித்து வருகின்றனா்.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்