செங்கோட்டையை தத்தெடுத்தது டால்மியா

- in டாப் நியூஸ்
99
Comments Off on செங்கோட்டையை தத்தெடுத்தது டால்மியா

புதுடில்லி: இந்தியாவில் உள்ள, புராதன வரலாற்று நினைவுச் சின்னங்களை, தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டத்தை, கடந்தாண்டு, மத்திய அரசு அறிவித்தது.இத்திட்டத்தின்படி, நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்.

இதற்கு, அந்நிறுவனங்களிடம் இருந்து, பெரும் தொகை வசூலிக்கப்படும். நினைவுச் சின்னத்தை தத்தெடுக்கும் நிறுவனம், சுற்றுலா பயணியரை கவரும் வகையில், பல நவீன வசதி களை உருவாக்கி, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.இதற்கு, மத்திய சுற்றுலாதுறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, அங்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாபயணியரிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், அதில் கிடைக்கும் வருமானத்தை, அந்த புராதன கட்டடத்தின் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு விதிமுறைகள் விதித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், டில்லியில், ஐந்தாம் முகலாய மன்னன் ஷாஜகான் கட்டிய, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த செங்கோட்டை கட்டடத்தை தத்தெடுக்க, இண்டிகோ, ஜி.எம்.ஆர்., மற்றும் டால்மியா பாரத் குரூப் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
இந்நிலையில், 25 கோடி ரூபாய்க்கு, ஐந்தாண்டுகளுக்கு தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த, டால்மியா பாரத் குரூப்பிற்கு, செங்கோட்டை தத்து கொடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.செங்கோட்டை வளாகத்தின் உள்ளே, குடிநீர், மின் விளக்குகள், கழிப்பறைகள், பேட்டரி கார்கள், வைபை, உணவகங்கள் உட்பட பல வசதிகளை, ஓராண்டிற்குள், டால்மியா நிறுவனம் செய்து முடிக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியின் குதுப்மினார், ஜன்தர் மந்தர், சப்தர்ஜங் கல்லறை, ஒடிசாவின் சூரியக் கோயில், ரத்னகிரி, மஹாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் உட்பட பல வரலாற்று நினைவுச் சின்னங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால், விரைவில் தத்தெடுக்கப்பட உள்ளன.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்