சூப்பர் ஸ்டார் ரஜினியின் `கபாலி’ படத்தின் புதிய டீசர் வெளியீடு

- in ஹாட் கிசு கிசு
119
Comments Off on சூப்பர் ஸ்டார் ரஜினியின் `கபாலி’ படத்தின் புதிய டீசர் வெளியீடு
kabali3

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் படத்தின் புதிய டீசர் இன்றிரவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து முன்னதாக தனது சுட்டுரையில் தகவல் தெரிவித்திருந்த தயாரிப்பாளர் தாணு, ‘கபாலி படத்தின் பாடல் டீசரை இன்றிரவு 8 மணிக்கு வெளியிடுகிறேன். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்’ என்றார்.

Facebook Comments