சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

- in மருத்துவம்
96
Comments Off on சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலிற்கு தேவையாக ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும்.
100கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் இதில் உள்ளது.
மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கையான நோய் எதிர்ப்பு பொருட்களாகும். இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறிவிடும். இதனால் தேக ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.
கிழங்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு மட்டுமே உண்ண வேண்டும்.
கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை உள்ளது.

 

Facebook Comments

You may also like

இயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …!

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத