சுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..?

- in சிறப்புக் கட்டுரை, பல்சுவை, வினோதங்கள், ஸ்மைல் ப்ளீஸ்
153
Comments Off on சுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..?

அமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கிய சிஇஓ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் ஆகியோரை விடவும் சுமார் 3.5 மடங்கு அதிகமான சம்பளத்தை எவென் வாங்கியுள்ளார். இப்பட்டியலில் இவர் தான் முதல் இடம். இவ்வளவு சம்பளம் வாங்கும் அளவிற்கு இவர் யார்..? எவென் ஸ்பிஜெல் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணை நிறுவனர் தான் எவென் ஸ்பிஜெல், கடந்த வருடம் இந்நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இறங்கியதை அடுத்து இவருக்கு அதிகமான சம்பளத்தை அளிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

2017ஆம் ஆண்டில் மட்டும் எவென் ஸ்பிஜெல் சுமார் 504.5 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3,400 கோடி ரூபாய்.   கேகேஆர் அண்ட் கோ எவென் ஸ்பிஜெல்-ஐ தொடர்ந்து கேகேஆர் அண்ட் கோ நிறுவனத்தின் இரு துணை தலைவர்களான ஸ்காட் நட்டால் 214 மில்லியன் டாலரும், ஜோசப் பே 213.5 மில்லியன் டாலரும் 2017ஆம் ஆண்டில் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.

டாப் 10 பட்டியலில் இவர்கள் இருவரும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.   எலான் மஸ்க் இவர்களைத் தொடர்ந்து சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையை மாற்றப்போகும் எலன் மஸ்க் 150 மில்லியன் டாலர் சம்பளத்துடன் இப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இது 1,000 கோடி ரூபாய்.   சுந்தர் பிச்சை தமிழரான சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுனத்தின் கிளை நிறுவனமான கூகிள்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

இது மட்டும் ஆல்பபெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் சுந்தர் உள்ளார். 2017ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை 144.3 பில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 970 கோடி ரூபாயுடன் டாப் 10 பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.   ராப் ராய் அமெரிக்காவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 பட்டியலில் ஸ்விச் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ராப் ராய் 143.6 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிளாக்ஸ்டோன் குரூப் இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சிஇஓவாக இருக்கும் ஸ்டீபன் ஸ்வார்ஷ்மேன் 125.5 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். கேகேஆர் அண்ட் கோ இவரை தொடர்ந்து கேகேஆர் அண்ட் கோ நிறுவனத்தின் துணை நிறுவனர்கள் மற்றும் இணை சிஇஓக்களான ஜார்ஜ் ராபெர்ட்ஸ் 121.3 மில்லியன் டாலரும், ஹென்றி கார்விஸ் 121 மில்லியன் டாலர் சம்பளத்தை பெற்றுள்ளனர். டோனி ரெஸ்லெர் ஏரீஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் டோனி ரெஸ்லெர் 108.9 மில்லியன் டாலர் சம்பளத்துடன் இப்படியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.