சீன அதிபர் ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

- in டாப் நியூஸ்
69
Comments Off on சீன அதிபர் ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

வூஹான் : சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று(ஏப்.,27) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்திய – சீன எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைளை, இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இதையேற்று, மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்தவும், பிரதமர் மோடி, நேற்று மாலை, சீனா புறப்பட்டு சென்றார்.

சீன அதிபருடனான பேச்சில், தற்போதுள்ள பிரச்னைகள் குறித்து மட்டும் விவாதிக்கப்பட உள்ளது என்றும், ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகாது என்றும் கூறப்பட்டுள்ளது. இரு நாட்டு வர்த்தகம், எல்லைப் பிரச்னை, பாக்., பயங்கரவாத அமைப்பான, ஜெய்ஷ் – இ – முகமது தலைவன், மசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா., விதித்த தடை குறித்தும், என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதை, சீனா தடுப்பது குறித்தும், பிரதமர் மோடி, பேச்சு நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, இன்று மாலை 3.30 மணியளவில், வூஹான் நகரில் நடைபெறுகிறது. இங்குள்ள மா ஜியோடாங் நினைவு இல்லத்தை மோடிக்கு, ஜின்பிங் சுற்றி காட்ட உள்ளார். இருவரும் இணைந்து படகு சவாரியும் செய்ய உள்ளனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்