சிவில் இன்ஜினியர்கள் ஆட்சியர் பணிகளில் சேர வேண்டும்:திரிபுரா முதல்வர்

- in டாப் நியூஸ்
78
Comments Off on சிவில் இன்ஜினியர்கள் ஆட்சியர் பணிகளில் சேர வேண்டும்:திரிபுரா முதல்வர்

அகர்தலா: சிவில்இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் இந்திய ஆட்சியர் பணிகளுக்கு வர வேண்டும் என திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் ஆட்சியர் பணிகளுக்கு வரவேண்டாம். அதே சமயம் சிவில் இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் ஆட்சியர் பணிகளுக்கு வர வேண்டும். அவர்களிடம் தான் நிர்வாகம் மற்றும் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு அறிவு மற்றும் அனுபவம் கிடைக்கும் என கூறி உள்ளார்.
முதல்வர் பிப்லாப் குமார் தேவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாபாரத காலத்தில் திருதிராஷ்டிரர்மூலமாக இண்டர் நெட் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவும் முன்னாள் உலக அழகி டயானா ஹை டன் அழகானவர் அல்ல வியாபார நோக்கத்திற்காக அவருக்கு உலக அழகி பட்டம் தரப்பட்டது.என பரபரப்பான கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்