சிங்கப்பூர் கணவர் பணம் அனுப்ப மாட்டேன்கிறார் வலையில் விழுத்திய பொலிஸ்

- in சமூக சீர்கேடு
118
Comments Off on சிங்கப்பூர் கணவர் பணம் அனுப்ப மாட்டேன்கிறார் வலையில் விழுத்திய பொலிஸ்
சிங்கப்பூர் கணவர் பணம் அனுப்பமாட்டேன்கிறார் விசாரித்து நீங்கதான் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என ஒரு பெண், மகளிர் காவல் நிலையத்தில் நீதி கேட்டு செல்ல, விசாரணை நடத்திய பெண் போலீஸ், சிங்கப்பூர் ஆணை தன் வலையில் விழுவைத்து திருமணம் செய்து கொண்டார்.

புகார் கொடுத்த பெண் மீண்டும் ஒரு காவல் நிலையம் சென்று பெண் போலீஸாரிடம் இருந்து கணவரை மீட்டு தாருங்கள் என புகார் கொடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே தெற்குபரணம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(40) சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வக்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கு தொலைப்பேசியில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. தனால் மனைவியுடன்  பேசுவதை நிறுத்திக்கொண்ட செல்வக்குமார், மாதந்தோறும் வீட்டுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்திக்கொண்டார்.

செல்வக்குமாருக்கு மூன்று குழந்தைகள். இதனால் லதா குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார். வீட்டுக்கு பணம் அனுப்ப கோரி உறவினர்களும் செல்வக்குமாரிடம் கூறியுள்ளனர். ஆனால், அப்போதும் அவர் பணம் அனுப்பவில்லை. இதனால் லதா, இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்துக்கு சென்று பெண் போலீஸார் ராதிகாவிடம் புகார் அளித்தார்.

அதோடு செல்வக்குமாரின் தொலைப்பேசியின் எண்ணையும் கொடுத்து அவரிடம் பேசிமாறு கூறினார். புகார் செய்த 4 மாதங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே  பெண்போலீஸ் ராதிகா செலவக்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பணம் அனுப்ப கூறுவதற்காக பேசியுள்ளார்.

ஆனால் அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாடு திரும்பிய செல்வக்குமார், ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார். இதை அறிந்த லதா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து செல்வக்குமார் கைது செய்யப்பட்டார். ராதிகா தலைமறைவாக உள்ளார். மேலும் ராதியாவும் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்