சபாஷ் ஸ்ரேயாஸ்! ‘முதல்’ போட்டியில் டில்லி வெற்றி

- in கிரிக்கெட்
55
Comments Off on சபாஷ் ஸ்ரேயாஸ்! ‘முதல்’ போட்டியில் டில்லி வெற்றி

புதுடில்லி: கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் டில்லி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் 40 பந்தில் 93 ரன்கள் விளாச, 55 ரன்களில், டில்லி அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கின்றது. இதன் லீக் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். டில்லி அணியில் காம்பிர் களமிறங்கவில்லை.

நல்ல துவக்கம்:

டில்லி அணிக்கு பிரித்வி ஷா, முன்ரோ (33) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இளம் வீரர் பிரித்வி ஷா, 38 வது பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். இவர், 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷாப் பன்ட் ‘டக்’ அவுட்டாக, மேக்ஸ்வெல் (27) ரன் அவுட்டானார்.

முதன் முதலாக கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ், அரைசதம் கடந்தார். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாச, மொத்தம் 29 ரன்கள் கிடைத்தன. டில்லி அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் (93 ரன், 40 பந்து, 10 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

ரசல் ஆறுதல்:

கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணியின் ‘டாப் ஆர்டர்’ சரிந்தது. கிறிஸ் லின் (5), உத்தப்பா (1), நரைன் (26 ரன், 9 பந்து), ராணா (8) என, வரிசையாக கிளம்பினர். தினேஷ் கார்த்திக் நீடிக்கவில்லை. ஷுப்மன் (37), ஷிவம் (0) அடுத்தடுத்த கிளம்பினர். ரசலும் (44) போல்டாக, கோல்கட்டா தோல்வி உறுதியானது.

கோல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் மட்டும் எடுத்து, வீழ்ந்தது. டில்லி அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் (7), மிட்சல் ஜான்சன் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்