சட்டசபையில் ஜெ., படம்: எதிர்த்த மனு தள்ளுபடி

- in ஸ்மைல் ப்ளீஸ்
78
Comments Off on சட்டசபையில் ஜெ., படம்: எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை: சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கடந்த பிப்.,12ல் தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அகற்ற வலியுறுத்தியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு: சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது. நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இது போன்ற வழக்குகளால் தவறாக பயன்படுத்தக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.