சச்சினை பார்த்து இருக்கேன்.. ஆனாலும் கோஹ்லிதான் கிரேட்.. ஒப்புக் கொண்ட தாதா!

- in கிரிக்கெட்
98
Comments Off on சச்சினை பார்த்து இருக்கேன்.. ஆனாலும் கோஹ்லிதான் கிரேட்.. ஒப்புக் கொண்ட தாதா!

கொல்கத்தா: சச்சினை விட திறமையான வீரர் கோஹ்லிதான் என்று கங்குலி ஒப்புக் கொண்டு இருக்கிறார். மேலும் கோஹ்லி என்ன சாதனை எல்லாம் படைக்க போகிறார் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் கோஹ்லிதான் அடுத்த சச்சின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் கங்குலி ஒருபடி மேலே போய், சச்சினை விட கோஹ்லி சிறந்தவர் என்றுள்ளார். அதேபோல் கோஹ்லியின் கேப்டன்சி எப்படி இருக்கிறது என்றும் விமர்சித்து இருக்கிறார். சமீபத்தில்தான் இந்தியா தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை 5-1என வென்றது குறிப்பிடத்தக்கது. வேறு மாதிரி கங்குலி இதுகுறித்து கூறும் போது ”இந்திய அணியில் என்னையும் சேர்த்து சேவாக், டிராவிட், சச்சின் என சிறந்த வீரர்கள் இருந்தார்கள். கோஹ்லியும் அப்படி ஒருவர் என்றுதான் நினைத்தேன். ஆனால் கோஹ்லி அப்படி இல்லை. அவர் வேற லெவல். கோஹ்லி எங்களைவிட கிரேட்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். கெத்து கேப்டன் அதேபோல் ”எனக்கு பின் அணியை டோணி மிகவும் சிறப்பாக வழிநடத்தினார். யாருமே டோணி இந்த அளவிற்கு அணியை முன்னேற்றுவார் என்று நினைக்கவில்லை. ஆனால் கோஹ்லி அவரை முந்திவிட்டார். கோஹ்லி எப்படி இதுபோல் நன்றாக விளையாடிக் கொண்டே கேப்டனாக இருக்கிறார் என்று தெரியவில்லை” என்றுள்ளார். சச்சினுக்கு மேல் மேலும் ”எல்லோரும் கோஹ்லியை சச்சினுடன் சேர்த்து வைத்து பார்க்கிறார்கள். எனக்கு சச்சினை தெரியும். கண்டிப்பாக சொல்கிறேன். கோஹ்லி சச்சினை விட சிறந்தவர்” என்று குறிப்பிட்டு உள்ளார். இன்னும் கூட அதேபோல் ”இன்னும் இந்திய அணிக்கு நிறைய தொடர்கள் இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர் என நிறைய போட்டிகள் இருக்கிறது. இதிலும் கோஹ்லி சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அவரின் முழு திறமை இதில் வெளிப்படும்” என்றுள்ளார்.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்