சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன் -டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

- in டாப் நியூஸ்
79
Comments Off on சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன் -டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே  சுவாமி மலையில் திவாகரன் குற்றச்சாட்டுக்கு  டிடிவி தினகரன் பதில் அளித்து இன்று பேசியதாவது:-
சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறார் திவாகரன். குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன், ஆனால் அவர்களுக்கு கட்டுப்பட முடியாது. கட்சி தொடர்பாக திவாகரனிடம் பேசியது கிடையாது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியில் அண்ணா இல்லை என்ற காழ்ப்புணர்ச்சியால் திவாகரன் இவ்வாறு பேசி வருகிறார். பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை பார்க்காதவர் திவாகரன்.
சசிகலாவை பற்றி திவாகரன் எப்படி எல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும். உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு, கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க நினைக்கிறார் திவாகரன்.
*குடும்ப உறவை கடந்து, அரசியல் உறவு திவாகரனுடன் கிடையாது. உறவினர்களிடம் அரசியல் பற்றி பேச முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்