கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலை : கோடிக்கணக்கான ரூபாய் பான்மசாலா பொருட்கள் பறிமுதல்

- in டாப் நியூஸ்
57
Comments Off on கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலை : கோடிக்கணக்கான ரூபாய் பான்மசாலா பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள  கண்ணாம்பாளையத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடைபெற்று வரும் இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி  தலைமையில் ஏராளமான போலீசார் ஆலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் வாசனை பாக்குகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரித்த பாக்குகளை சேமித்து வைக்க குடோனும் இருக்கிறது. தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த  தகவலின்  அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் இங்கு இருந்து தான் தமிழகம், கர்நாடகா ,கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு  பான்மசாலா பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலையில் காவல்துறையினர் 10மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து ஆலையில் நடத்திய சோதனை குறித்தும், கைப்பற்றப்பட்ட குட்கா  பொருட்கள் குறித்து சற்று நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலை அருகே பத்திரிகையாளர்களை அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை கண்ணாம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கிய குட்கா ஆலை முன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  சட்டவிரோதமாக குட்கா ஆலை இயங்கிய விவகாரத்தை அரசு மூடிமறைக்க முயல்கிறது என்றும் சட்டவிரோதமாக குட்கா ஆலை இயங்கியது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும்  திமுக எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்