கொழுப்பு சத்துக்காக பவுடர் கலப்பது வழக்கம் ஆவினை பின்பற்றும் தனியார் பால் நிறுவனங்கள்

- in டாப் நியூஸ்
522
Comments Off on கொழுப்பு சத்துக்காக பவுடர் கலப்பது வழக்கம் ஆவினை பின்பற்றும் தனியார் பால் நிறுவனங்கள்

தமிழக அரசின், ‘ஆவின், நிறுவனமே, கொழுப்பு சத்து நிறைந்த பாலில், உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதித்துள்ள அளவில், கொழுப்பு மற்றும் இதர சத்துக்களுக் காக, பால் பவுடரை கலக்கிறது.

‘அனுமதி அளவில், பால் பவுடரை கலக்கும் தனியார் பால் நிறுவனங்கள் மீது மட்டும், கலப்படம்’ என, அமைச்சர் குற்றம் சாட்டுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தால், மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவற்றை தனியார் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில், ‘பால் கெடாமல் இருக்க, தனியார் நிறுவனங்கள், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தை கலக்குகின்றன’ என, பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். இது, பொதுமக்க ளிடம் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, பால் தயாரிப்பு நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந் தன. இதையடுத்து, அமைச்சருக்கு எதிராக, தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஆதாரம் இன்றி குற்றச்சாட்டுக்களை அமைச்சர் கூறக்கூடாது’ என, உத்தரவிட்டது.

அதிருப்தி

இந்த வழக்கு, சில தினங்களுக்கு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தரப்பில் அளித்த பதில், தனியார் நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் மற்றும் தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் போது, அதில் சராசரி யாக, 4.2 – 4.7 சதவீதம் கொழுப்பு சத்து; 7.8 – 8.3 சதவீதம், கொழுப்பு தவிர்த்த பிற சத்துக்கள் இருக்கும். மத்திய அரசு அனுமதித்தபடி, தற்போது, கொழுப்பு சத்து நீக்கப்பட்டது; இருநிலை சமன் படுத்தப்பட்டது. கொழுப்பு சத்து நிறைந்தது என, ஐந்து வகையான பால், சந்தையில் கிடைக்கி றது.ஒவ்வொரு வகை பாலிலும், கட்டாயம் இருக்க வேண்டிய சத்துக்களின் விபரங்களை, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

இதன்படி, கொழுப்பு சத்து நிறைந்த பாலில், கொழுப்பு சத்து, 6 சதவீதமும்; இதர சத்துக்கள், 9 சதவீதமும் இருக்க வேண்டும். ஆனால், கலப்படம் தொடர்பான வழக்கில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில், தாக்கல் செய்யப் பட்டுள்ள பதில் மனுவில், குறிப்பிடப்பட்டு உள்ள விபரங்கள், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன

தனியார் பால் நிறுவனங்கள் கூறியுள்ளதாவது:

விஜய் நிறுவனத்தின்,

கொழுப்பு சத்து பாலில், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடர் கலக்கப்பட்டுள்ளது; டோட்லா, ஆரோக்யா, விஜய் நிறுவனங் களின் கொழுப்பு சத்து பாலில், உணவு பாதுகாப்பு தர நிர்ணய அளவுக்கு தரம் இல்லை’ என, அமைச்சர் தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், கொழுப்பு சத்து பாலில், எந்த வகை சத்துக்கள் இருக்க வேண்டும் என, விதிகளை வரையறுத்துள் ளது. அதன்படியே, பாலில், 6 சதவீதம் கொழுப்பு சத்தும், 9 சதவீதம் இதர சத்துக்களும் இருக்க வேண்டும். அவ்வாறு, அந்த சத்துக்களின் அளவை நிர்ணயிக்க, பாலில், ‘மில்க் சாலிட்ஸ்’ என்ற, பால் உப பொருட்கள் சேர்த்து கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பால் தயாரிப்பு நிறுவனங்கள், பாலின் உப பொருட்களான, வெண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடரை கலந்து, 6 சதவீதம் கொழுப்பு மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களை சமன் செய்கின்றன. இதற்கு, ஆவின் நிறுவனமும் விதி விலக்கல்ல.குறிப்பாக, ஆவின் தயாரிக்கும் கொழுப்பு சத்து பாலில், மேற்கண்ட சத்துக்களின் அளவை நிர்ணயிக்க, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் கலக்கப்படுகிறது.

இது, வழக்கமான நடைமுறையே. ஆவின் நிறுவனமே, பால் பவுடரை கலக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மீது மட்டும் புகார் தெரிவிப்பது ஏற்புடையது அல்ல.

சோதனை முறை சரியா?

* பாலின் தரம் குறித்து சோதனை செய்ய, உணவு பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு, ஆய்வு செய்ய விரும்பினால், பால் மாதிரிகளை, இரு தரப்பு சம்மதத்துடன் ஆய்வுக்கு
உட்படுத்த வேண்டும்.

* அரை லிட்டர் அல்லது ஒரு லிட்டர் பாக்கெட் பாலை பிரித்து, அதை, நான்கு சிறு பிளாஸ்டிக் குடுவைகளில் மாதிரி எடுக்க வேண்டும். அவை, கெட்டு போகாமல் இருக்க, ‘பார்மால்டிஹைடு’ என்ற, வேதி பொருள் சேர்க்க வேண்டும்
* நான்கு குடுவைகளில், முதல் குடுவையில் எடுக்கப்பட்ட பாலின் மாதிரியை, ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.

* 2-வது குடுவை பாலை, கடை உரிமை யாளர் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனம் விரும்பும், ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்

* முதலில் அனுப்பிய குடுவையில் உள்ள பால் தொடர்பாக, கூடுதல் விபரங்கள் தேவைப்படுவதாக இருந்தால், அந்த ஆய்வகத்துக்கு, மூன்றாவது குடுவையில் உள்ள பால் அனுப்ப வேண்டும். நான்காவது குடுவையில் உள்ள பாலை, ஆணையம் பாதுகாத்து வைக்கும். இவ்வாறு தான், பாலின் தரம் ஆய்வுக்குஉட்படுத்தப்படுகிறது

* தென் மாநிலங்களில் எடுக்கப்படும் பாலின் மாதிரியை, மஹாராஷ்டிரா மாநிலம், புனே; கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள ஆய்வகங் களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது விதி. ஆனால், தனியார் நிறுவனங் களின் பாலில் கலப் படம் உள்ளதாக கூறி, எடுக்கப்பட்ட மாதிரியை, உத்தரபிரதேசத்தில் உள்ள, காசியாபாத் ஆய்வகத் துக்கு அனுப்பிய தாக, அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது
* மாதிரியை ஆய்வுக்கு அனுப்பும் போது, சம்பந்தப்

பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற விதி இருந்தும், அதை பின்பற் றாததால், ஆய்வகத்திற்கு அனுப்பிய பாலில், வேண்டு மென்றே ரசாயனம் கலக்கப்பட்டிருக் கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தனியார் பால் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆவின் பாலிலும் கலப்பு:

பெயர் குறிப்பிட விரும்பாத, ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆவினுக்காக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலில், கொழுப்பு சத்து, 4 – 4.5 சதவீதம்; கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள்,8- 8.6 சதவீதமும் உள்ளன. கொழுப்பு சத்து உடைய பால் தயாரிக்கும் போது, அதில் கொழுப்பு சத்து குறைவாக இருந்தால், ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு சத்து கிரீமும்; இதர சத்துக்கள் குறைவாக இருந்தால், தேவையான அளவுக்கு பால் பவுடரும் சேர்த்து, சமன் செய்யப்படு கிறது. இது, வழக்கமான நடைமுறை தான்; இதை, கலப்படம் என,கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரின் வழக்கறிஞர் ஒப்புதல்

”ஆவினின் கொழுப்பு சத்து வகை பாலில், சத் துக்களின் அளவை சமன் செய்ய, பால் பவுடர் கலக்கப்படுகிறது,” என, பால் வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜியின் வழக்கறி ஞர் விஜய் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

‘தகுந்த ஆவணங்கள் இன்றி, தனியார் நிறுவ னங்களின் பால் கலப்படம் பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசக் கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள் ளது. அமைச்சர் தகுந்த ஆவணங் களுடன் பேசுவதற்கு எந்த தடையும் இல்லை.

பால் கலப்படம் தொடர்பாக, மூன்று நிறுவனங் கள் மீது, நீதிமன்றத்தில், 123 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் நடந்த விபரங்களை, அந்த வளாகத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்; அதில், நீதிமன்ற அவமதிப்பு இல்லை.கொழுப்பு சத்து பாலில், எந்த அளவு கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகள் வகுத் துள்ளது. அதில், அந்த சத்துக்களின் அளவை சமன் படுத்த, ஆணையம் விதித்துள்ள அளவுக்கு, ஆவின் நிறுவனம், பால் பவுடரை கலக்கிறது. தனியார் நிறுவனங்கள், அதிக பால் பவுடரை கலக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்