கொஞ்சி விளையாடுவதால் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்!…

- in அந்தரங்கம்
298
Comments Off on கொஞ்சி விளையாடுவதால் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்!…

எப்போதும் மகிழ்ச்சியுடன் மன அழுத்தமின்றி இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். படுக்கையில் கட்டிப்பிடித்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று என்பதால் மகிழ்வாக இருக்க அதைச் செய்வதில் தவறில்லை.

இதன் மூலம் உறவில் பல பலன்களை அடைய முடியும். அதிக நீடித்த அன்பைக் கொண்ட ஜோடிகள் பெரும்பாலும் இவ்வித விளையாட்டுகளில் படுக்கையில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இது அவர்களின் ஆரோக்கியமான உறவிற்கு அடையாளமாக இருக்கிறது.

படுக்கையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு பிறகு ஒருவரின் மார்பில் ஒருவர் தூங்குவது அவசியமான ஒன்று. உங்கள் உறவினை சிக்கலில்லாமல் வைத்துக் கொள்ள மிகச்சிறந்த ஒரு வழி இது.

அது ஒரு நல்ல உணர்வு

நீங்கள் ஆர்வமுடன் உங்கள் துணையோடு விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றால், மொத்த உலகமே உங்களுக்கு சரியாக இயங்குவதாகத் தோன்றும். இதற்கு முக்கிய காரணம் மகிழ்வான உணர்வைத் தரும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் தான். இது உங்களை உள்ளிருந்து மகிழ்ச்சியாக வைக்கிறது.

மன அழுத்தத்தை போக்கும்

உங்களை மகிழ்ச்சியாக வைப்பதோடு மட்டுமல்லாமல், இந்த ஆக்சிடோசின் மேலும் கார்டிசோல் எனப்படும் அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் அளவையும் குறைக்கிறது. எனவே நீங்கள் உங்கள் துணையுடன் அரவணைத்து விளையாடும் போது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறீர்கள்.

சண்டைக்குப் பிறகு கையாள வேண்டிய சரியான வழிமுறை

நீங்கள் உங்கள் துணையுடன் சண்டையிட்டிருந்தால், படுக்கையில் அவரை கொஞ்சி விளையாடுங்கள். சும்மா போய் கட்டிபிடிச்சி விளையாடுங்க. நீங்க மன்னிப்பு கூட கேட்க வேண்டாம். அணைப்பதும் கொஞ்சுவதும் அதோடு நின்றுவிடுவதில்லை. ஆமாம், அது உங்கள் இல்லற சுகத்தை அதிகரிக்கும்.

எந்த பேச்சுக்கும் இடமில்லை

விஷயங்களை தெரிவிக்க வார்த்தைகள் இல்லாமல் தெரிவிக்க முடியுமானால், அதுவே சிறந்த முறையாக இருக்க முடியும். நீங்கள் உங்கள் துணையை அரவணைத்து விளையாடும் போது, அனைத்து கவலைகளும் பறந்துவிடும். உங்களின் உள்ளங்கள் அல்ல, உடல்கள் மட்டுமே பேசிக்கொள்ளும்.

நெருக்கத்தை உணர உதவும்

இப்போதெல்லாம் கணவன் மனைவிகள் உடலாலும், உணர்வாலும் விலகியிருக்க வேண்டிய சூழ்நிலைகள் வாழ்வில் தோன்றுகின்றன. பகலில் உங்களால் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், இரவில் உங்கள் துணையுடன் அணைத்து உறவாடி நெருக்கத்துடன் இருங்கள்.

நல்ல உறக்கத்திற்கு உதவும்

நீங்கள் மன அழுத்தம் நீங்கப்பெற்று மகிழ்ச்சியுடன் உங்கள் படுக்கையில் சில விளையாட்டுகளை எதிர்பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக தூக்கம் வரும். அணைத்து விளையாடுதல் உங்களுக்கு நல்ல வசதியான ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொஞ்சி விளையாடுதல் இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. நீங்கள் இருவரும் அணைத்து விளையாடி பின்னர் தூங்கினால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்