கைபேசியை திருட வந்தவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. கடைசியில வடைபோச்சே பாஸ்…

- in Videos
99
Comments Off on கைபேசியை திருட வந்தவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. கடைசியில வடைபோச்சே பாஸ்…

 

லண்டன் நகரின் வடபகுதியில் உள்ள முஸ்வெல் ஹில் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு வாலிபர் தனது காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி, ஐபோன் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் மூழ்கிப் போனவராய் நடைபாதை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அந்த வாலிபரின் கவனம் ‘வாட்ஸ்அப்’பில் முற்றிலுமாக பதிந்திருந்ததால் அவரது ஐபோனை சுலபமாக பறித்து விடலாம் என எண்ணிய அப்பகுதி பைக் கொள்ளையர்கள் தங்களது ‘வெஸ்பா’ ஸ்கூட்டரை நடைபாதையின் மீது ஏற்றி அந்த வாலிபரை நெருங்கி வந்தனர்.

ஸ்கூட்டரின் பின்னால் இருந்த நபர் அந்த வாலிபரின் கையில் இருந்த ஐபோனை பறித்தார். ‘கைக்கு எட்டியது பாக்கெட்டுக்கு போகாத குறையாக கொள்ளையனின் கையில் இருந்து நழுவிய ஐபோன் கீழேவிழ, அதற்குள் அந்த ஸ்கூட்டர் அந்த இடத்தை கடந்து சென்று விட்டது.

ஏமாந்த வாலிபரிடம் இருந்து ஐபோனை கொள்ளையடிக்கும் தங்களது கூட்டாளிகளின் திட்டம் வெற்றியடைந்ததா? என ஒரு காரின் மறைவில் பைக்கில் அமர்ந்தபடி நோட்டமிட்ட மேலும் இரு கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், தனது ஐபோனை கொள்ளையர்கள் பறிக்க முயன்றது பற்றி சற்றும் பதற்றப்படாத அந்த வாலிபர் கீழேகிடந்த ஐபோனை எடுத்து, ஹெட்போனை காதில் சொருகியவராய் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தனது நடையை தொடர்ந்தார்.

இந்த காட்சிகள் அனைத்தையும் அவ்வழியாக காரில் வந்த ஒருவர் தனது கமெராவில் பதிவு செய்துள்ளார்.

Facebook Comments