கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் பரவி வருகிறது !

- in டாப் நியூஸ்
58
Comments Off on கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் பரவி வருகிறது !
கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற புது வகை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் நிபா எனும் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்பட்ட இந்த காய்ச்சல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இதுவரை 18 பேர் நிபா காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மண் பூச்சிகளால் பரவும் புது வகை காய்ச்சலான கருப்பு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருப்பு காய்ச்சல் போன்ற நோய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் திருச்சூர், மலபூரம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்