கெளதம் கார்த்திக்கு ஜோடியான மஞ்சிமா !

- in சினிமா
51
Comments Off on கெளதம் கார்த்திக்கு ஜோடியான மஞ்சிமா !
கெளதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘தேவராட்டம்’. பொதுவாக முத்தையா படம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சாதியைத் தூக்கிப் பிடித்துத்தான் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்தப் படத்தின் தலைப்பிலேயே அந்த சாதி இடம்பெற்றுள்ளதால், இதுவும் அப்படிப்பட்டப் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

muthiah

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல். – வீரமணி இருவரும் எடிட் செய்கின்றனர். இந்தப் படத்தின் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியிருக்கிறது. ‘அச்சம் என்பது மடமையடா’, ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’ படங்களைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கும் நான்காவது படம் இது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி