குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பாலியல் பலாத்காரம் நடிகர் மீது இளம் பெண் புகார்

- in டாப் நியூஸ்
107
Comments Off on குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பாலியல் பலாத்காரம் நடிகர் மீது இளம் பெண் புகார்
பெங்களூர்
கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர்  சுப்ரமண்யா ‘ஹோம்பன்னா’ என்ற கன்னட படம் ஒன்றில் நடித்து உள்ளார்.இவருக்கும் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின் இது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிந்ததை அடுத்து திருமணம் குறித்த பேச்சுக்கள் எழுந்து இருக்கிறது.
ஆனால் திருமணம் செய்ய சுப்ரமண்யா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல்படமான ‘ஹோம்பன்னா’ வெளிவந்த பின்பே திருமணம் பற்றி பேசமுடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் படம் வெளி வந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்துள்ளார். வீடு கட்டிய பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 1ம் தேதி சுப்ரமண்யா அந்த பெண்ணை தன் சகோதரி வீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார். ஆனால் விழாவிற்கு அழைத்து செல்லாமல் தன்னுடைய வாடகை வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதன் பின்பும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சுப்ரமண்யா மறுத்துள்ளார். மேலும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் ஆசிட் அடித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். அதேபோல் ”அடுத்த படத்திற்கு 20 லட்சம் பணம் வேண்டும். அந்த பணத்தை கொடுக்கும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன். நீ ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்” என்று கூறியுள்ளார்.
தற்போது சுப்ரமண்யா குறித்து அந்த பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்த உடன் அவர் தலைமறைவாகி விட்டார் .தற்போது போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்